பொழுதுபோக்கு

’விஸ்வரூபம் 2’ டைட்டில் சாங் வீடியோ!

கமல்ஹாசனின் ’விஸ்வரூபம் 2’ படத்தின் டைட்டில் சாங்கை படக்குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர்.   

’விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் வேளையில் விறு விறுவென இறங்கிய கமல்ஹாசன், பிறகு அதை கிடப்பில் போட்டுவிட்டு, திடீரென ‘சபாஷ் நாயுடு’ படத்தை ஆரம்பித்தார்.

வெளிநாட்டில் நடந்த ’சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பில் கமல்ஹாசனுக்கு காலில் அடிபட்டதால், அந்தப் படமும் கிடப்பில் போடப்பட்டது.

இதற்கிடையே,’பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மாறிய கமல்ஹாசன், ’பிக் பாஸ்’ நிகழ்ச்சி முடியும் தருவாயில் அதிரடியாக அரசியல் களத்தில் குதித்தார். தற்போது மீண்டும் ’பிக் பாஸ் 2’ நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக இருக்கிறார்.  

இந்நிலையில், கிடப்பில் போடப்பட ‘விஸ்வரூபம் 2’ படத்தை ரிலீஸ் செய்யும் பணியில் பரபரப்பாகி, முதல் கட்டமாக ட்ரெயிலரை வெளியிட்டார். அதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.  

இந்நிலையில், அதில் இடம் பெறும் டைட்டில் சாங் வீடியோவை இன்று வெளியிட்டிருக்கிறார் கமல்ஹாசன். 

தமிழ், தெலுங்கு, இந்தி என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் வெளிவர இருக்கும் ’விஸ்வரூபம் 2’ படத்தில் கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ், சேகர் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 10ல் திரைக்கு வருகிறது.

Related Articles

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker