ஆரோக்கியம்

உடல் சூடு : இயற்கை வைத்தியங்கள்!

இவற்றை அன்றாடம்  பின்பற்றினால், உடல் சூட்டில் இருந்து விடுபடலாம்.

தண்ணீர்Image result for water
உடல் வெப்பத்தைக் குறைப்பதற்கான வழி என்னவென்று கேட்டால், முதலில் பலருக்கும் தண்ணீர் தான் நினைவில் வரும். ஆகவே ஒரு அகன்ற பாத்திரத்தில் குளிர்ந்த நீரை நிரப்பி, அதில் கால்களை ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வர, உடலில் உள்ள அதிகமான வெப்பம் வெளியேறும். மேலும் குடிக்கும் நீரின் அளவையும் அதிகரிக்க வேண்டும்.

எள்Related image
உடலின் வெப்பநிலையை சீராகப் பராமரிக்க தினமும் இரவில் படுக்கும் முன், 1 டேபிள் ஸ்பூன் எள்ளை சாப்பிட வேண்டும். குறிப்பாக எள்ளில் ஓபியேட்ஸ் உள்ளது மற்றும் இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. மேலும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது.

வெந்தயம்Image result for venthayam
இது பலரும் அறிந்த ஓர் முறையே. அது என்னவெனில் அதிகாலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் வெந்தயத்தை ஒரு ஸ்பூன் எடுத்துக் கொண்டு வாயில் போட்டு, தண்ணீர் குடித்து விழுங்க வேண்டும். இப்படி தினமும் கோடையில் செய்து வந்தால், உடல் வெப்பத்தைக் குறைக்கலாம்.

பால் மற்றும் தேன்Related image
உடல் வெப்பத்தைக் குறைக்க சிறந்த பானம் என்னவென்று நீங்கள் யோசித்தால், அது பால் மற்றும் தேன் கலவை தான். ஆம் வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலம், உடல் வெப்பம் தணியும்.

சந்தனம்Image result for சந்தனம்
சந்தனப் பொடியை நீர் அல்லது குளிர்ந்த பாலில் கலந்து பேஸ்ட் செய்து, நெற்றி மற்றும் தாடையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் குறைந்து, உடல் குளிர்ச்சியடையும். வேண்டுமானால், சந்தனப் பொடியுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்தும் பயன்படுத்தலாம்.

வெண்ணெய் மற்றும் பால்Image result for butter and milk
ஒரு டம்ளர் பாலில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும், உடல் வெப்பத்தைக் குறைக்கலாம். ஆனால் உங்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகதவிர்க்கவும், இம்முறையைத் தவிர்க்கவும

 

மோர்Image result for மோர்
கோடையில் மோர் உடலைக் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும். மேலும் மோரில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் புரோபயாடிக்குகள் போன்றவை அதிகம் உள்ளதால், இது கோடையில் உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

இளநீர்Image result for இளநீர்
கோடையில் உடல் வறட்சியடையாமலும், குளிர்ச்சியுடனும் இருக்க இளநீர் பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே கோடைக்காலத்தில் தவறாமல் தினமும் 2 இளநீரைப் பருகுங்கள்.

சோம்பு நீர்Related image
ஒரு கையளவு சோம்பை எடுத்து நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீரை வடிகட்டி, தினமும் காலையில் குடித்து வர, உடல் வெப்பம் குறையும்.

கற்றாழை ஜூஸ்Image result for கற்றாழை ஜூஸ்
கற்றாழையின் ஜெல்லை தினமும் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால், அது உடலைக் குளுமைப்படுத்துவதை நன்கு உணர முடியும். மேலும் கற்றாழையின் ஜெல்லை 2 ஸ்பூன் எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது தேன் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து குடித்து வர, கோடையில் பிடித்த உடல் சூடு குறையும்.

கரும்பு ஜூஸ்Image result for கரும்பு ஜூஸ்
கோடையில் தெருவின் மூலைமுடுக்குகளில் கரும்பு ஜூஸ் விற்பதைக் காண்பீர்கள். இந்த கரும்பு ஜூஸை குடிப்பதால், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து நல்ல விடுதலைக் கிடைக்கும். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள்.

Related Articles

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker