கிரிக்கெட்

இந்த விஷயத்துல தோனியை அடிச்சுக்க ஆளே கிடையாது!! மீண்டும் நிரூபித்த “தல”.. வைரல் வீடியோ

பேட்டிங்கிற்கு அப்பாற்பட்டு விக்கெட் கீப்பிங்கில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் தோனி.

விக்கெட் கீப்பிங்கில் பல்வேறு சாதனைகளை தன்னகத்தே கொண்டுள்ள தோனி, 37 வயதிலும் அதிவேகமாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்த கூடியவர்.

ஸ்டம்பிங் மற்றும் ரன் அவுட்களை அதிவிரைவாக செய்வதில் தோனி வல்லவர்.

Image result for dhoni ஸ்டம்பிங்அதிகமான கேட்ச்களை பிடித்த விக்கெட் கீப்பர்களில் கில்கிறிஸ்ட், மார்க் பௌச்சர் ஆகியோர் தோனிக்கு முன்னாள் இருந்தாலும், ஸ்டம்பிங்கை பொறுத்தவரை மற்ற விக்கெட் கீப்பர்கள் தோனியை நெருங்க கூட முடியாது.

தோனியின் அதிரடியான பேட்டிங்கால் அவர் கவர்ந்த ரசிகர்களுக்கு நிகராக அவரது விக்கெட் கீப்பிங்கிற்கும் ரசிகர்கள் உள்ளனர்.

கண்ணிமைக்கும் நொடியில் ஸ்டம்பிங் செய்துவிடுவார் தோனி. அதேபோல சமயோசித புத்தியால் வித்தியாசமாக ரன் அவுட் செய்வதிலும் தோனிக்கு நிகர் தோனி தான்.

அதுமாதிரியான ஒரு ரன் அவுட்டை இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தோனி செய்துள்ளார். 257 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் பேர்ஸ்டோ மற்றும் வின்ஸ் அதிரடியாக ஆடினர்.

Image result for dhoni ஸ்டம்பிங்பேர்ஸ்டோவின் விக்கெட்டை ஷர்துல் தாகூர் வீழ்த்தினார். மற்றொரு விக்கெட் தேவை என்ற நிலையில், அதிவேகமாக செயல்பட்டு வின்ஸை ரன் அவுட் ஆக்கினார் தோனி.

இங்கிலாந்து இன்னிங்ஸில் 10வது ஓவரின் முதல் பந்தை ரூட் அடித்துவிட்டு ஒரு ரன் ஓட முயன்றனர். அந்த பந்தை பிடித்த ஹர்திக் பாண்டியா வேகமாக தோனியிடம் வீசினார்.

பந்து தரையை ஒட்டி வந்தபோதிலும் அதை ஒற்றைக்கையில் பிடித்து அநாயசமாக ரன் அவுட் செய்தார் தோனி.

இது ரன் அவுட் ஆகியிருக்கும் என எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். ஒரு நூல் இடைவெளிதான் இருந்திருக்கும், பேட்டிற்கும் கிரீஸுக்கும் இடையில். ரீப்ளே செய்து பார்த்ததில் அது அவுட் தான் என்பது உறுதியானது.

Related Articles

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker