கிரிக்கெட்

இரு மாநிலத்தின் சிறந்த குடிமகன் பட்டத்தை தட்டிச்சென்ற தோனி.!! இரண்டாவது முறையாக சாதனை.!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்கு தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறார்.

அவர் மேல் ஆயிரம் விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், அதனை முறியடித்து தனது திறமை நிரூபித்து கொண்டிருக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற உள்ள தோனி, ஒரு நாள் மற்றும் T20 தொடர்களுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார்.

பிசிசிஐ-யுடன் ஒப்பந்தம் செய்துள்ள வீரர்களில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள தோனி விளம்பரங்கள் மற்றும் கால்பந்து, ஹாக்கி தொடர்களுக்கான அணிகளை வைத்திருப்பது ஆகியவற்றின் மூலம் தனது இதர வருவாய்களை பலமடங்கு உயர்த்தியுள்ளார்.

ஒரு நாட்டின் சிறந்த குடிமகன் என்ற பெயரில் வருமான வரியை சரியாக செலுத்தி வருகிறார். கடந்த 2013-14-ம் நிதியாண்டிலும் அதிக வரி செலுத்தியவர் என்ற பெருமையை தோனி பெற்றிருந்தார்.

2017-18 நிதியாண்டில் ரூ.12.17 கோடியை வருமான வரியாக செலுத்தியுள்ளார். இதன் மூலமாக பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் அதிக வருமான வரி செலுத்தியவர் என்ற பெறுமையையும் மீண்டும் பெற்றுள்ளார்.

கடந்த நிதியாண்டில் மட்டும் அவர் ரூ.12 கோடியே 17 லட்சம் வருமானவரி செலுத்தியுள்ளார்.

Related Articles

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker