தமிழகம்

சென்னை சென்ட்ரல்- மதுரை விரைவு ரயில் இன்று ரத்து

சென்னை சென்ட்ரல்- மதுரை விரைவு ரயில் (20601) இயக்கம் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரக்கோணம் ரயில்வே பணிமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கியமான சீரமைப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல்- மதுரை விரைவு ரயிலின் இயக்கம் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரல்- மதுரை விரைவு ரயில் (20601) வெள்ளிக்கிழமையும் (மே 5), மதுரை- சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (20602) ஞாயிற்றுக்கிழமையும் (மே 6) ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரல்- பாலக்காடு விரைவு ரயில் (22651) வெள்ளிக்கிழமை (மே 4) இரவு 9.40-க்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல் வழியாக இயக்கப்படும்.

Related Articles

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker