தமிழகம்

தமிழக முதல்வரை கண்டு இயற்கை சீற்றங்களே அஞ்சுகின்றன -செல்லூர் ராஜூ!

மதுரை (ஆகஸ்ட் 19): தமிழக முதல்வரை கண்டு இயற்றை சீற்றங்களே அஞ்சுகின்றன என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர் பி உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்த விழாவில் , தமிழக முதல்வரை கண்டு இயற்கை சீற்றங்களே அஞ்சுகின்றன என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். இது போல் பஞ்ச் டயலாக்குகள் , அதகளப்படுத்தும் டயலாக்குகளை பேசுவதில் செல்லூராருக்கு நிகர் செல்லூரார்தான்.

Related Articles

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker