பொழுதுபோக்கு

அனுஷ்கா, பிரபாஸ் அழகான ஜோடி – அனுஷ்கா அம்மா

‘பாகுபலி 2’ படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றிக்குப் பல காரணங்கள் இருந்தாலும், அந்தப் படத்தில் பொருத்தமான ஜோடியாக இருந்த பிரபாஸ், அனுஷ்கா இருவரும் முக்கியக் காரணம்.

பிரபாஸ் வீரமான ஆண் மகனாய் வலிமையுடன் அசத்த, அனுஷ்கா வீரத்துடனும், அழகுடனும் ஜொலித்தார். அவர்களைப் பற்றி ‘பாகுபலி’ காலத்திலிருந்தே காதல் வதந்தியும், திருமண வதந்தியும் வந்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அனுஷ்கா அம்மா அந்த பொருத்தமான ஜோடி பற்றி அவரது கருத்தைத் தெரிவித்திருக்கிறார். “அனுஷ்கா, பிரபாஸ் இருவரும் படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.

திரையில் அவர்கள் மிகவும் அழகான ஜோடி. பிரபாஸ் போன்ற ஒரு மருமகனை அடைய ஒவ்வொரு அம்மாவும் விரும்புவார்கள். ஆனால், அனுஷ்கா, பிரபாஸ் இருவரும் நண்பர்கள் மட்டுமே.

அவர்களது திருமணம் பற்றிய வதந்திகளை மீடியாக்கள் தவிர்க்க வேண்டும்,” என்று கூறியிருக்கிறார்.’பாகுபலி 2′ படத்திற்குப் பிறகு ‘பாகமதி’ படத்தில் நடித்த அனுஷ்கா, அதன் பின் வேறு எந்த புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரபாஸ் ‘சாஹோ’ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

Related Articles

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker