தொழில்நுட்பம்

Youtube : உலக அளவில் T-Series பெற்று சாதனை !!

கடந்த 2017-ஆம் ஆண்டு யூடியூப் வாடிக்கையாளர்களால் அதிக நேரம் பார்க்கப்பட்ட சேனல் என்ற பெருமையினை T-Series பெற்று தற்போது மேலும் ஒரு புதிய சாதனையினை படைத்துள்ளது.

முன்னதாக அதிக அளவு பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட சேனல் என்ற பெருமையினை T-Series பெற்ற போது அதன் சராசரி பார்வையாளர்கள் எண்ணிக்கை 48 பில்லியன் ஆகும். தற்போது இந்த பார்வையாளர்களின் எண்ணிக்கையானது 51 பில்லியனை தாண்டி பெரும் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் தற்போது அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்த யூடியூப் என்ற பெருமையினை பெறும் வேகத்தில் செல்லும் T-Series யூடியூப் சேனல் தற்போது 66 மில்லியம் வாடிக்கையாளர்கள் கடந்து சென்றுகொண்டிருக்கிறது.

இதன்மூலம் கடந்த 5 ஆண்டுகளாக அதிக வாடிக்கையாளர்களை பெற்ற நிறுவனம் என்ற பெருமையினை யூடியூப் சேனல் தக்கவைத்து PewDiePie சேனல் இரண்டாம் இடதிற்கு தள்ள முனைந்துள்ளது.

Pic Courtesy – Social Blade:

PewDiePie சேனல் ஆனது பிரபல ஸ்வீடிஸ் யூடியூபர் PewDiePie தனிநபர் கணக்காகும். தற்போதைய நிலைவரப்படி அவரது PewDiePie சேனலின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையானது 67 மில்லியன். கிட்டத்தட்ட 0.5 மில்லியன் வாடிக்கையாளர்களை மட்டுமே வித்தியாசமாக கொண்டுள்ள இந்த சேனல் இவ்வாறு பின்தங்கி நின்றதில்லை.

எப்போது லைக்ஸ்களை அள்ளி வரும் PewDiePie சேனல் தற்போது தனது வழக்கத்தினை இழந்துள்ளதாக யூடியூபின் அதிகாரப்பூர பகுப்பாய்வு இணையதளம் Social Blade தெரிவித்துள்ளது.

அதேவேலையில் T-Series நிறுவனத்தின் சேனல் ஆனது கடந்த 6 மாதத்தில் மட்டும் அசூர வளர்ச்சி கண்டுள்ளது. நாளொன்றுக்கு 25,000 வாடிக்கையாளர்களை PewDiePie பெற்றால், 130,000 வாடிக்கையாளர்களை T-Series பெற்று முதல் இடத்தை முந்த வருகின்றது.

இவ்வாறு சென்றால் ஒருமாதம் போதும் PewDiePie சேனல் தனது கிரிடத்தை இழக்கவுள்ளது. பாலிவுட் திரைப்படங்களை தயாரித்து வரும் T-Series நிறுவனத்தின் யூடியூப் சேனல், அதிக பின்தொடர்பாளர்களை பெற்ற சேனல் என்ற பெருமையினை பெறவுள்ளது.

Related Articles

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker