பொழுதுபோக்கு

‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் கமல்ஹாசன்

விஜய் டிவியில் நாளை ஜுன் 17 முதல் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் முடிவு செய்யப்பட்டுவிட்டார்கள். அவர்களைப் பற்றி அதிகாரப்பூர்வம் இல்லாத செய்திகளை சிலர் வெளியிட்டு வருகிறார்கள்.

இன்று அனைவருமே ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் நுழைந்துவிடுவார்கள். அதற்கான படப்பிடிப்பு இன்று நடைபெறும். இன்றைய படப்பிடிப்புதான் நாளைய முதல் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும்.

போட்டியாளர்களுக்கு முன்னதாகவே மாற்றியமைக்கப்பட்ட ‘பிக் பாஸ் 2’ வீட்டிற்குள் கமல்ஹாசன் நேற்று நுழைந்தார். வீட்டைப் பற்றிய அறிமுகப் படப்பிடிப்பை அவரை வைத்து நடத்தியிருக்கிறார்கள்.

சீசன் 1ல் இருந்த வீட்டில் சில மாற்றங்களைச் செய்துள்ளார்கள். புதிதாக வீட்டுக்குள் ஜெயில் ஒன்றையும் அமைத்துள்ளார்கள். முதல் சீசனை விட இரண்டாவது நிகழ்ச்சியின் கருத்தாக்கத்திலும் மாற்றங்கள் இருக்கும் என்கிறார்கள்.

முதல் சீசன் ஓவியாவால் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அது போல் இரண்டாவது சீசனிலும் நடந்து நிகழ்ச்சி பரபரப்பாக இருக்குமா அல்லது பரிதாபமாக இருக்குமா என்பது தேர்வு செய்யப்பட்டுள்ள போட்டியாளர்களைப் பொறுத்தே அமையும்.

அடுத்த 100 நாட்களுக்கு சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களுக்கு பஞ்சமிருக்காது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker