சினிமா

பாலிவுட்டையே அதிரவைத்து சர்கார் முதலிடம் !

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் சர்கார் இத்திரைப்படம் வருகிற தீபாவளிக்கு மிக பிரமாண்டமாக வெளியாகிறது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், மற்றும் வரலட்சுமி சரத்குமார் ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியாகிய டீசர் ரசிகர்களிடமும் ,பொதுமக்களிடம் மிகப் பிரமாண்டமான வரவேற்பு பெற்றது, டீசர் வெளியாகிய இரண்டு நாட்களிலேயே இரண்டு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.

அதுமட்டுமில்லாமல் 12 லட்சத்திற்கும் மேல் likes அள்ளி குவித்ததுள்ளது இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் பிரபல இணையதளமான IMDb இணையதளத்தில் தற்போது அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் சர்கார், சர்கார் திரைப்படத்தைப் பற்றிய தகவல்களை 60 சதவீதத்துக்கு மேல் இந்த இணையதளத்தில் தேடி உள்ளார்கள்.

தற்போது இந்த இணையதளத்தில் சர்கார் திரைப்படம் தான் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது, பாலிவுட் திரைப்படம் கூட இல்லையாம் என தெரிவித்துள்ளர்கள். இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Related Articles

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker