பொழுதுபோக்கு

See pic : இயக்குனர் ஷங்கர்- ஐ கவுரவப்படுத்திய வெற்றி உதவி இயக்குனர்கள்…!!!

ஷங்கர் இயக்குனராகி 25 ஆண்டுகள் நிறைவடைந்த நாளில் அவரின் உதவியாளர்கள் அவரை கவுரவித்துள்ளனர். அத்துடன் அவர்கள் அனைவரும் ஒன்று கூடி எடுத்துள்ள புகைப்படத்தை இயக்குனர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் ஷேர் செய்துள்ளார்.

1993ம் ஆண்டு ஜென்டில்மேன் படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் ஷங்கர். அவர் இந்த திரை உலகில் அடிவைத்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது.

வெற்றி இயக்குனர்களில் ஒருவாரன இவர் கோலிவுட் முதல் ஹொலிவுட் வரை பிரபலமானவர். இவருடன் பணிபுரிய அனைத்து நடிகர்கள், நடிககைள் கனவாகும்.

ஷங்கர் இயக்குனராகி 25 ஆண்டுகள் நிறைவடைந்த தினத்தன்று #25YearsOfDirectorShankar என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டானது. அந்த தினத்தில் அட்லி, பாலாஜி சக்திவேல் உள்பட ஷங்கரிடம் உதவியாளர்களாக இருந்தவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் குருவை கவுரவப்படுத்தினார்கள்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை இயக்குனர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Articles

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker