பொழுதுபோக்கு

7 வேடங்களில் ஜொலிக்கு ராதிகா-வின் “சந்திரகுமாரி” பிரமாண்ட தொடர்….!!!!

‘வாணி ராணி’ சீரியலை அடுத்து ராதிகா சரத்குமார் அடுத்ததாக ‘சந்திரகுமாரி’ என்ற சரித்திர சீரியலில் நடிக்கவுள்ளார்.

நடிகை ராதிகா தற்போது ‘வாணி ராணி’ என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் அவர் வாணி கேரக்டராகவும், ராணி கேரக்டராகவும் நடித்து வருகிறார். இந்த சீரியல் தொடங்கி தற்போது ஐந்து வருடங்கள் ஆகின்றன.

தற்போது இந்த சீரியல் விரைவில் முடியவுள்ளது. இந்நிலையில் ராதிகா தனது அடுத்த சீரியலை அவரின் ரடான் மீடியா ஒர்க்ஸ் மூலம் தயாரிக்கத் தொடங்கி விட்டார். இந்த சீரியலுக்கு ‘சந்திரகுமாரி’ என்று பெயர் வைத்துள்ளார். இந்த சீரியலில் ராதிகா 7 கேரக்டரில் நடிக்கிறாராம்

இதற்காக சென்னை மற்றும் மும்பையில் மிகப்பெரிய செட்டுகள் போட்டு இந்த சீரியலின் படப்பிடிப்பு நடநது வருகிறதாம். இந்த சீரியலை ‘பாட்ஷா’ பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார்.

ராதிகாவின் மகளாக ‘தாமிரபரணி‘ பட நடிகை பானு நடிக்கிறார். மேலும் நடிகைகள் ராதிகாவின் தங்கை நிரோஷா, உமா ரியாஸ்கான் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த சீரியலுக்கு சிற்பி இசையமைக்கிறார்.

ராதிகா சரத்குமார் நடிக்கும் பிரமாண்ட தொடர் ’சந்திரகுமாரி’- புகைப்படங்கள் வெளியீடு

‘சந்திரகுமாரி’ சீரியல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த சீரியல் பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் அக்டோபர் மாத இறுதியில் தினமும் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

Related Articles

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker