பொழுதுபோக்கு

சூர்யாவின் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த கே.வி.ஆனந்த்

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்ஜிகே படத்திற்கான போஸ்டர்கள் சூர்யாவின் பிறந்த நாளன்று வெளியானது.

இதையடுத்து எந்த முன் அறிவிப்புமின்றி இயக்குநர் கே.வி.ஆனந்த் தனது இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

இந்த போஸ்டர் படத்திற்கான போஸ்டரா அல்லது முதலில் எடுக்கப்பட்டதா என்பதை கே.வி.ஆனந்த் உறுதிப்படுத்தவில்லை.

Related imageஎனினும் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த போஸ்டரை ரீட்வீட் செய்துள்ளது.

எனவே இது புதிய படத்திற்கான போஸ்டர் என்றே தெரிய வருகிறது. இந்த போஸ்டரை கண்ட சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இப்படத்தில் சூர்யாவுடன் மோகன்லால், ஆர்யா ஆகியோரும் நடிக்கின்றனர். இதைத்தொடர்ந்து பாலிவுட்டில் முன்னாபாய் எம்.பி.பி.எஸ், 3 இடியட்ஸ் ஆகிய படங்களில் நடித்த பொமன் இரானியும் இணைந்துள்ளார்.

மேலும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை சாயீஷா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரமொன்றில் நடிகரும் இயக்குநருமான சமுத்திரகனி இணைந்துள்ளார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker