பொழுதுபோக்கு

ஆசியாவின் சிறந்த படம் ’மெர்சல்’: சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வு

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று ஹிட் அடித்தது.

Had some quality discussion about Asian Cinema with the other panelists at the #BIFAN film festival, held at Bucheon and I'm very glad to share with you that #Mersal was chosen, screened and appreciated under the 'best of Asian cinema' category 😊

Posted by Hema Rukmani on Friday, July 27, 2018

இப்படம் வெளியான ஒரு சில நாட்களில் படத்தில் இடம் பெற்றிருந்த ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட எதிர்ப்பு படத்திற்கு கூடுதல் விளம்பரமாய் மாறிப் போனது.

இதனால் படம் எதிர்பார்த்ததை விட அதிக வசூலை குவித்தது. இதன்படி இப்படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தென்கொரியாவில் உள்ள புச்சியான் நகரில், புச்சியான் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில் ஆசியாவின் சிறந்த படங்களில் ஒன்றாக ‘மெர்சல்’ படத்தையும் தேர்வு செய்து திரையிட்டனர். படத்தை பார்த்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இதை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஹேமா ருக்மணி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

INTERNATION ACHIEVEMENT RECOGNITION AWARDS என்கிற 2018 -ம் ஆண்டுக்கான ஐஏஆர்எ விருது பரிந்துரை பட்டியலில் மெர்சலில் நடித்ததற்காக நடிகர் விஜயின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker