சமையல் குறிப்பு

அவுல் கேசரி ……!

தேவையான பொருட்கள் :

குங்கும பூ- 1 சிட்டிகை
முந்திரி – 7
அவுல் -1 கப்
நெய் -தேவைக்கேற்ப
கேசரி பவுடர் -அரை டீஸ்பூன்
சர்க்கரை – 2 கப்
ஏலாக்காய் பொடி -1 டீஸ்பூன்

செய்முறை :

  • ஒரு கடாயில் அவுலை போட்டு சிவக்க வறுத்து கொள்ளவும்.வறுத்த அவுலை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
  • பின் கடாயில் தண்ணீர் விட்டு, அது நன்றாக கொதித்த பிறகு பொடித்த அவுல், குங்கும பூ, கேசரி பவுடர் சேர்த்து கிளறி 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  • பின் அவுல் வெந்த பிறகு சர்க்கரையை சேர்த்து கிளறி நெய்யை கொஞ்சகொஞ்சமாக சேர்த்து 20 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
  • பின் நெயில் முந்திரியை தாளித்து கொட்டவும். இப்போது சுவையான அவுல் கேசரி ரெடி.

    குறிப்பு: குங்கும பூ இல்லமாலும் செய்யலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker