சமையல் குறிப்பு
தீபாவளி ஸ்பெ௸ல் சாக்லேட் பேடா செய்வது எப்படி?
தீபாவளி ஸ்பெ௸ல் சாக்லேட் பேடா செய்வது எப்படி பாா்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோயா – 1 கப்
கோக்கோ பவுடர் – 2 மேஜைக்கரண்டி
சக்கரை – 1/4 கப்
வெண்ணிலா எசென்ஸ் – 1/2 தேக்கரண்டி
பொடியாக வெட்டிய பாதாம் – 3
சீவிய பாதாம் – 1 மேஜைக்கரண்டி
வெண்ணெய் – 1 தேக்கரண்டி
செய்முறை
- ஒரு அடி கனமான பாத்திரத்தில், கோயா, சாக்லேட் பவுடர், சக்கரை, வெண்ணெய், பொடியாக வெட்டிய பாதாம், எல்லாவற்றையும் சேர்த்து அடுப்பில் வைத்துச் சூடு செய்யவும். தீ மிதமாக இருக்கவேண்டும். நன்கு கலந்து விடவும். எல்லாம் கலந்து நன்கு இளகும்.
- இப்பொழுது, வெண்ணிலா எஸ்ஸன்ஸ் சேர்க்கவும். மிதமான தீயில் கிளறிக்கொண்டே இருக்கவும். ஓரங்கள் ஒட்டாமல் திரளும்.
- பிறகு கெட்டியாகி, கரண்டியுடன் சேர்ந்து கலவைச் சுற்றும். அப்பொழுது அடுப்பை அணைத்து விடவும்.
- ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவும். கை பொறுக்கும் சூட்டிற்கு வந்தவுடன், கையில் நெய் தடவிக்கொண்டு, சம அளவு உருண்டைகளாகப் பிரிக்கவும். சிறிய பாதுஷா வடிவில் தட்டலாம். அல்லது ஒரு சிறிய வட்டமான மூடியில் நெய் தடவி, சீவிய பாதாம் சிறிது தூவி, அதன் மேல் சாக்லேட் கோயா கலவையை வைத்து, வட்டமாகத் தட்டவும்.
- பேக்கிங் ஷீட்டில் வைத்து 30 நிமிடம் பிரிட்ஜில் எடுத்து வைத்து பாிமாறவும்
குறிப்பு
தீ எப்பொழுதும் நிதானமாக வைக்கவேண்டும். முதலில் பிசுபிசுப்பாக இருப்பது போல இருக்கும். ஆனால் பிறகு, காய்ந்து விடும். ஓரிரு நாட்களில் சாப்பிட்டுவிடவேண்டும்.