சமையல் குறிப்பு

பூண்டு மிளகாய் சாதம் செய்வது எப்படி ?

தேவையானவை:

அரிசி        –         ஒரு கப்
பூண்டு, பச்சைமிளகாய்     –     விழுது
பச்சைமிளகாய்       –      6 
வெங்காயம்       –        ஒரு கப்
கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி      –     கால் கப்

செய்முறை:

  • முதலில் சாதத்தை நன்றாக உதிரியாக வடித்து ஆறவைத்துக் கொள்ளவும்.

  • பின்பு, அடுப்பில் கடாய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  • வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் நன்கு வதங்கிய பின் அதில் கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

  • பின்னர் அரைத்து வைத்திருக்கும் பூண்டு மற்றும் பச்சைமிளகாய் விழுதை சேர்த்து வதக்கும் போது தேவையான அளவு உப்பு சேர்த்து 1 நிமிடம் வரை நன்றாக வதக்கி இறக்கவும்.

  • பின்பு, வடித்து ஆறவைத்துள்ள சாதத்ததுடன் இந்த கலவையை சேர்த்து நன்றாக கிளறி சூடாகப் பரிமாறவும்.

  • சுவையான பூண்டு மிளகாய் சாதம் ரெடி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker