சமையல் குறிப்பு

டுடே ஸ்பெஷல் : உளுத்தம்பருப்பு ஸ்வீட் கட்லெட் !!

தேவையான பொருட்கள்:

நாட்டுச்சர்க்கரை – கப்
உளுத்தம்பருப்பு – அரை கப்
நெய் – கால் கப்
ஏலக்காய் – தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் உளுத்தம்பருப்பை ஒரு வாணலியில் போட்டு, பொன்னிறம் ஆகும் வரை வறுத்தெடுக்கவும்.

  • அதன் பின் வறுத்தெடுத்த உளுத்தம்பருப்பை மிக்ஸியில் போட்டு ரொம்பவும் நைஸாக இல்லாமல் பக்குவமாக அரைத்து எடுக்கவும்.

  • பின்னர், ஏலக்காய் மற்றும் சர்க்கரை இடித்து பொடிசெய்யவும். அதன் பின், நைஸாக அரைத்து வைத்த உளுத்த மாவு, சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி ஆகிய மூன்றையும் நன்றாக கலந்துகொள்ளவும்.

  • பின்னர், அந்த மாவை ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் கொஞ்சம் எடுத்து வைத்து உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் கட்லெட் போல தட்டி வைத்துக்கொள்ளுங்கள்.|

  • பின்பு, அடுப்பில் தோசைக்கல்லை வைத்து கல் காய்ந்தவுடன், உங்கள் விருப்பமான வடிவத்தில் தட்டிய வைத்திருக்கும் கட்லெட்டுகளை தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் நெய்விட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  • சுவையான ஸ்பெஷல் உளுத்தம்பருப்பு ஸ்வீட் கட்லெட் ரெடி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker