ஆரோக்கியம்

கால்சியம் குறைபாட்டை போக்கும் பேரிச்சம் பழம் !

பழங்களிலேயே தனிச்சுவை கொண்டது பேரிச்சம் பழம். தரமான, நல்ல சத்துள்ள பேரிச்சம் பழங்கள் ஆப்ரிக்க, அரேபிய நாடுகளிலேயே விளைகிறது.

Image result for datesபேரிச்சம் பழத்திற்கு இரத்தத்தை விருத்தி செய்யும் ஆற்றலும், இரத்தத்தை வளப்படுத்தும் இயல்பும் உண்டு.தினமும் இரவில் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டுவிட்டு பின் ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் போதும் இரத்தம் விருத்தி அடைவ தோடு, உடலில் தெம்பும், வலிமையும் கூடும்.

உடலில் சர்க்கரைத் தன்மை குறைந்து சோர்வடையும் போது, சில பேரிச்சம் பழங் களைப் சாப்பிட்டாலே போதும் உடனே ரத்தத்தில் சர்க்கரைத் தன்மையை அதிகரித்து உடலை சமநிலைக்கு கொண்டுவரும்.பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது.

ஒரு அவுன்ஸ் பேரிச்சம் பழத்தில் 170 மில்லி கிராம் வைட்டமின் ஏ சத்து அடங்கியுள்ளது. மேலும் பி1 வைட்ட மின் 26 மில்லி கிராமும், பி2 வைட்டமின் 9 மில்லி கிராமும் உள்ளது.இரும்புச் சத்து 30 மில்லி கிராமும், சுண்ணாம்புச் சத்து 20 மில்லி கிராமும் உள்ளது.

Image result for datesபெண்களுக்குப் பொதுவாக கால்சியம் குறைபாடு அதிகம் ஏற்படுகிறது. இவர்கள் பேரிச்சம் பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால் கால்சியம் குறைபாட்டை தவிர்க்க முடியும்.மேலும், மாதவிடாய் காலங்களில் பெண் களுக்கு ஏற்படும் சோர்வையும் பேரிச்சம் பழம் உட்கொள்வதால் போக்க முடியும்.

இளம் பெண்கள் பெரும்பாலானவர் களுக்கு இரத்த சோகை உள்ளது. இதனால் குழந்தைப் பேறு காலகட்டத்தில் பாதிப்பு ஏற்படு கிறது.இதனைத் தவிர்க்க பேரிச்சம் பழத்தை உட்கொள்ளுங்கள் இரத்த சோகையைப் போக்கிக் கொள்ளுங்கள்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker