ஆரோக்கியம்

வீட்டிலேயே இருக்கும் மூலிகைகள்..!!!!!

மூலிகைகள் பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். அதிலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டில் உள்ள உணவு பொருட்களிலேயே ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன.

நாகரிகம் என்ற பெயரில் இன்றைக்கு பலரும் துரித உணவுகள் பக்கம் திரும்பி விட்டனர். இதனால், நோய்கள் புற்றீசல் போன்று புறப்பட்டு விட்டன. மனித உடலானது, நோய்களின் கூடாரமாகி விட்டது.

இதையெல்லாம் கட்டுப்படுத்த மூலிகைகள் பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். அதிலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டில் உள்ள உணவு பொருட்களிலேயே ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன.

Image result for curry leavesகறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் இவற்றை தண்ணீரில் கொதிக்கவைத்து, ஆறவைக்க வேண்டும். அந்த நீரை வடிகட்டி குடித்தால் அஜீரணத்திலிருந்து நிவாரணம் கிட்டும். அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வயிற்றுவலி போன்றவற்றை குறைக்க மிளகு அருமருந்து. உணவில் மிளகைச் சேர்த்துக் கொள்வதால் இவை ஏற்படாமல் தவிர்க்கப்படும்.

மிளகு சாப்பிடுவதால் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கிறது. அது வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை சரிசெய்கிறது. வெந்தயம் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும்.

Related imageசிறிதளவு வெந்தயத்தை வறுத்து, சோம்பும், உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். கசகசாவை நன்கு ஊறவைத்து அரைத்து மோருடன் கலந்து குடித்து வந்தால் சீதபேதி கட்டுப்படும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாகற்காய், அவரைப்பிஞ்சு ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும். இறுக்கமான காலணிகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

Related imageநாவல்பழம் அடிக்கடி சாப்பிட, சர்க்கரை நோய் கட்டுப்படும். தினமும் கையளவு நாவல்பழங்களை சாப்பிட்டால், சிறுநீர்க்குழாயில் ஏற்படும் தொற்று குணமாகும். சிறுநீர்க்குழாயில் காணப்படும் பாக்டீரியாவை அழிக்கக்கூடிய ரசாயனங்கள் நாவல் பழத்தில் உள்ளன.

வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து முகத்தில் பூசி வர பருக்கள் குறையும். பாதாம்பருப்பில் வைட்டமின் ‘ஈ’ சத்து அதிக அளவில் உள்ளது. தினமும் 10 முதல் 15 பாதாம் பருப்புகள் சாப்பிடுவதன் மூலம் சருமம், தலைமுடி, நகங்கள் ஆகியவை பளபளப்பாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker