ஆரோக்கியம்

உடல் நச்சுக்களை எளிதாக வெளியேற்றலாம்!

உடல் எடை அதிகரிப்புக்கும், ஆரோக்கிய குறைவுக்கும் உடற் கழிவுகள் மிக முக்கியக் காரணம். பெரிய சிகிச்சைகள் செய்து இதனை வெளியேற்றத் தேவையில்லை. வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டே, நம் உடலில் தேங்கியுள்ள நச்சுகளை வெளியேற்றலாம்.

எலுமிச்சை சாறுRelated image

சூடான தண்ணீர் மற்றும் ஃபிரெஸ்ஸாக பிழிந்த எலுமிச்சை இரண்டும் மிகச் சிறந்த காம்பினேஷன். இது உடலில் இருக்கும் நச்சுகளை போக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது. அதில் துருவிய இஞ்சியையும் சேர்க்கலாம். எலுமிச்சை மற்றும் இஞ்சி செரிமானத்தை மேம்படுத்தி, வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. சிறந்த ரிசல்ட்டுக்கு இதை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.

கிரீன் டீRelated image

டீ காஃபி போன்ற பானங்கள் உங்கள் உடலிற்கு தீங்கு விளைவிக்கிறது. இதன் விளைவுகளைச் சரிசெய்ய, கீரின் டீயை குடிக்கலாம். இது செரிமான மண்டலத்தை சுத்தமாக்குவதுடன், உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, எடை இழப்புக்கும் உதவுகிறது.

ஃப்ரஷ்ஷான பழ சாறுகள்Image result for fresh juice

பேக் செய்யப் பட்ட பழ சாறுகளில் பிரிஸர்வேட்டிவ்ஸ், சுவை அதிகரிப்புகள், கலர் ஏஜென்ட்ஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட சர்க்கரை ஆகியவைகள் இருக்கின்றன. அதற்கு பதிலாக, ஃபைபர்கள் நிறைந்த ஃப்ரஷ்ஷான பழ சாறுகள் உடலை சுத்தப்படுத்துவதோடு செரிமானத்தையும் சீர் செய்ய உதவுகிறது.

நிறைய தண்ணீர்Image result for water drinking

எல்லா நேரங்களிலும் உடலை நீர்ச்சத்துடன் வைத்திருப்பது முக்கியம். உடலில் உமிழ்நீர் உற்பத்தி செய்ய தண்ணீர் தேவை, வியர்வை மற்றும் கழிவை நீக்குவதற்கும் தண்ணீர் உதவுகிறது.

தூக்கம்Image result for sleeping

உடலை சுத்தம் செய்வதுப் போல மனதை சுத்தம் செய்வதும் அவசியம். இரவு தூக்கத்தின் முக்கியதுவத்தை நம்மில் பலர் அறிவதில்லை. நீங்கள் தூங்கும்போது உங்கள் மூளை நச்சுகளை வெளியேற்ற முயற்சிக்கிறது. எனவே, இரவில் போதுமான அளவு தூங்குங்கள்.

இதனை பின்பற்றினால் எளிதாக கழிவுகளை வெளியேற்றி, ஆரோக்கியமாக வாழலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker