ஆரோக்கியம்

இளநீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் !!

மனித மூளையால் இதுவரை கலப்படம் செய்ய முடியாத ஒரு பொருள் இளநீர். இயற்கை மனிதர்களுக்கு அளித்த கொடையில் முக்கியமான ஒன்று இளநீர். எண்ணற்ற மருத்துவ பலன்கள் கொண்ட இளநீரை விரும்பாதவர்கள் சொற்பமே. ஆனால் நன்மைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா? அதுபோலத்தான் இளநீரிலும் அளவற்ற பயன்கள் இருந்தாலும் சில பக்க விளைவுகளும் உள்ளது.

உண்மைதான். இளநீர் அதிகம் குடிப்பதால் உடலில் சில பக்க விளைவுகள் ஏற்படலாம், அதேபோல சிலருக்கு மட்டும் இளநீர் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே இளநீர் குடிக்கும் முன் எச்சரிக்கையாக இருங்கள். இங்கே யாரெல்லாம் இளநீர் குடிக்கக்கூடாது மற்றும் அதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.

 ஹைடிரேஷன்:

இளநீரில் அதிகளவு எலக்ட்ரோலைட்ஸ்களான பொட்டாசியம், கார்போஹைடிரேட், சோடியம் மற்றும் மக்னீசியம் உள்ளது. எனவே இது உடலில் உள்ள நீரின் அளவை குறையாமல் பார்த்துக்கொள்ளும். ஆனால் சில மருத்துவர்கள் இவை முழுமையாக ஹைடிரேஷன்க்கு உதவுவதில்லை என்று கூறுகிறார்கள். எனவே இதனை மட்டுமே நம்பி இருக்க வேண்டாம்.

 விளையாட்டு வீரர்கள்:

விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் பயிற்சி முடிந்தவுடன் இளநீர் குடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இது அவர்கள் உடலுக்கு போதுமான ஆற்றலை தருகிறது என்று நம்புகிறார்கள். ஆனால் சாதாரண தண்ணீர் கொண்டிருக்கும் நீரேற்ற பண்புகள் இளநீரில் இல்லை. இதில் உள்ள கார்போஹைடிரேட்க்காக வேண்டுமென்றால் இதனை குடிக்கலாம். இன்னும் சிலர் நீரின் அளவை அதிகரிக்க உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன் இளநீரை குடிக்கிறார்கள், இது மிகவும் தவறானது.

 இரத்த அழுத்தம்:

ஆய்வுகளின் படி இளநீர் இரத்த அழுத்தத்தை குறைக்க கூடியது. இது நல்லதாக தோன்றினாலும் இரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் இதனை குடிக்கும் போதுஇது அவர்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

Image result for ஹைடிரேஷன்:சிஸ்டிக் பைப்ராஸிஸ்:

சிஸ்டிக் பைப்ராஸிஸ் என்பது இரத்தத்தில் உப்பின் அளவை குறைவாக இருப்பதாகும். சிலர் இதனை சரி செய்ய மருந்துகளை எடுத்து கொள்ளவேண்டும் குறிப்பாக சோடியம் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இளநீரில் சோடியத்தை விட பொட்டாசியமே அதிகம் உள்ளது. எனவே இது எந்த வகையிலும் உங்கள் உடலில் உப்பின் அளவை அதிகரிக்க உதவாது.

Image result for கர்ப்பிணிகளுக்கு ஏற்றதல்லகர்ப்பிணிகளுக்கு ஏற்றதல்ல:

கர்ப்பிணி பெண்களும், தாய்ப்பாலூட்டும் பெண்களும் இளநீர் அதிகமாக குடிப்பது பாதுகாப்பானதல்ல. அதிகளவு இளநீர் குடிப்பது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே முடிந்தளவு இளநீரிடம் இருந்து விலகி இருங்கள்.

 சிறுநீரக கோளாறுகள்:

இளநீரில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது. பொதுவாக உடலில் அதிகளவு பொட்டாசியம் இருந்தால் அது சிறுநீரின் மூலம் வெளியேற்றபடும். ஒருவேளை உங்களுக்கு சிறுநீரக கோளாறுகள் இருந்தால் இந்த வேலை சரியாக நடக்காது. இதனால் உடலில் பொட்டசியத்தின் அளவு அதிகரித்து சில பக்க விளைவுகள் ஏற்படலாம். எனவே சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் இளநீர் குடிப்பதை தவிர்க்கவும்.

 அறுவைசிகிச்சை:

இளநீர் உங்களுடைய இரத்த அழுத்தத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. எனவே அறுவைசிகிச்சையின் போதோ அல்லது அறுவைசிகிச்சைக்கு பிறகோ இளநீர் குடிப்பதை நிறுத்தி வைக்கவும். அறுவைசிகிச்சை முடிவான நாளிற்கு குறைந்தது இரண்டு வாரத்திற்காவது இளநீர் குடிப்பதை தவிர்க்கவும்.

 அலர்ஜிகள்:

சிலருக்கு குறிப்பிட்ட உணவுகளால் அலர்ஜிகள் ஏற்பட வாய்ப்புண்டு. இளநீரிலும் அதுபோன்ற சில பொருட்கள் உள்ளது. எனவே அலர்ஜி பிரச்சினை உள்ளவர்கள் இளநீர் குடிப்பதை தவிர்க்கவும்.

 

 அதிகளவு சர்க்கரை:

பழச்சாறுகளுக்கு பதிலாக இளநீர் குடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. அதற்கு காரணமாக கூறப்படுவது இளநீரில் குறைந்தளவு சர்க்கரை இருப்பதாகும். ஆனால் ஒரு டம்ளர் இளநீரில் 6.26 கிராம் சர்க்கரை உள்ளது. எனவே சர்க்கரை பிரச்சினை உள்ளவர்கள் இளநீர் குடிப்பது ஆபத்தானதாகும்.

 எலெக்ட்ரோலைட் சமநிலையின்மை:

அதிகளவு இளநீர் குடிப்பது ஹைட்ரொக்லேமியா ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கும். ஹைட்ரொக்லேமியா சோர்வு, தலைவலி மற்றும் மயக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும். சிலருக்கு இளநீர் குடித்தால் சிறிது நேரத்திற்கு நடப்பதே சிரமமாக இருக்கும். இதற்கு காரணம் இதிலுள்ள எலெக்ட்ரோலைட்டுகள்தான்.

 எடை அதிகரிப்பு:

ஒரு டம்ளர் இளநீரில் 46 கலோரிகள் இருக்கிறது ஆனால் அது பிரெஷானதாக இருக்க வேண்டும். பாட்டில்களில் அடைக்கப்பட்ட இளநீரில் இருமடங்கு கலோரிகள் இருக்கும். எனவே அதனை வாங்கி நீங்கள் குடிக்கும்போது அது உங்கள் எடையை அதிகரிக்கும். எனவே பிரெஷான இளநீர் குடிப்பதில் கவனம் செலுத்துங்கள்.

 உடனடியாக குடிக்க வேண்டும்:

இளநீரை வெட்டியவுடன் குடித்துவிட வேண்டும். சிறிது நேரம் கழித்தோ அல்லது அடுத்த நாளோ குடிக்கும் போது அதில் எந்த சத்துக்களும் இருக்காது. அதிலுள்ள அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்க வேண்டுமெனில் உடனடியாக குடிப்பது அவசியம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker