வாழ்க்கைமுறை

தோப்புக்கரணம் போடுவதால் கிடைக்கும் பலன்கள் !

நம் முன்னோர்கள் காலம் காலமாக நமது வழிபாட்டு முறைகளுடன் வாழ்வியல் முறைகளையும் கலந்து தந்திருப்பதுதான் .தோப்புக்கரணம் என்னும் ஒற்றைப் பயிற்சியின் மூலமாக யோகாசனத்தின் அத்தனை நன்மைகளையும் பெற்றிருக்கிறோம்.இது மகிழ்ச்சிகரமான உண்மை.

Image result for தோப்புக்கரணம்தோப்புக்கரணம் போடும்போது நமது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம். காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன.

காது மடல்களைப் பிடித்து தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளும் செயல்படுவதற்கான ஒரு தூண்டுதல் கிடைக்கிறது.

உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள ‘சோலியஸ்’ எனும் தசை இயங்க ஆரம்பிக்கிறது.சோலியஸ் தசையால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும். Related imageஇதயத்தின் தசைகளை போன்றே இது வேலை செய்கிறது .

தோப்புக்கரணம் தினம் சிறிது நேரம் செய்வது வலது மூளை இடது மூளை இரண்டும் நன்கு சீராக செயல் பட்டு நினைவு திறனை அதிகரிக்க செய்யும்.

தோப்புக்கரணம் செய்யும் போது அடிக்கடி உட்கார்ந்து எழும்புவதால் சுவாச உறுப்புகள் சீராக அமையும். இதனால் நமக்கு தேவையான ஆக்ஸிஜனை நன்கு சுவாசிக்க முடியும்.

Related Articles

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker