வாழ்க்கைமுறை

சோர்வுக்கான காரணமும் அதற்கான தீர்வும் !

புகை பிடிப்பவராக இருந்தால் உடனடியாக அதனை நிறுத்துங்கள். நிறுத்திய நிமிடத்திலிருந்து அநேக நன்மைகளை உடலில் உணர்வீர்கள். என்னவோ தெரியலை. எப்பவும் சோர்வா இருக்கு என்று நினைக்கிறீங்களா? கீழ்கண்ட விஷயங்களில் நீங்கள் சரியாக இருக்கிறீங்களா என்று உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதிக சர்க்கரை எடுத்துக் கொள்கின்றீர்களா?

Related imageசிலருக்கு எதற்கெடுத்தாலும் சர்க்கரை வேண்டும். அத்தோடு ஸ்வீட்ஸ் இல்லாமல் இருக்க முடியாது என்ற பழக்கம் இருக்கும். இத்தகையோர் எப்பவுமே சோர்வாகவே இருப்பார்கள். இவர்களுக்கு சர்க்கரை, இனிப்பு பண்டங்கள் மைதா வேண்டும். இதனைச் செய்தாலே அவர்கள் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஆகிவிடுவர்.

நீங்கள் தேவையான அளவு உடற்பயிற்சி செய்கின்றீர்களா? உடற்பயிற்சி என்ற பெயரில் சிறு பிள்ளைகள் போல் கையை காலை நீட்டுவது, வாரம் ஒரு முறை 10 நிமிடம் நடப்பது போன்றவை எல்லாம் உடற்பயிற்சி ஆகாது.

Image result for dullness feelingஅன்றாடம் குறைந்தது 30 நிமிடங்கள் நடங்கள். யோகா செய்யுங்கள். கண்டிப்பாய் சக்தி கூடும். காலை உணவை தவிர்ப்பவர்கள் நாள் முழுவதும் சோர்வாகவே இருப்பார்கள். அத்துடன் நெஞ்செரிச்சல். வயிற்றுப்புண் என பாதிப்புகள் தொடரும். மேலும் காலையில் காபி, டீ என மதியம் வரை வயிற்றில் ஆசிட் ஊற்றுவதும் உடலை வெகுவாய் பாதிக்கும். நெடுநேரம் உணவின்றி இருப்பது ரத்தத்தில் சர்க்கரை அளவினை குறைத்துவிடும்.

Image result for dullness feelingமுழுதானிய உணவு. புரதம்-முட்டை, பால்வகை, கொட்டை வகை உணவுகளுக்கு மாறுங்கள். சோர்வு பறந்து ஓடி விடும். நகராது ஒரே இடத்தில் வெகு நேரம் அமர்ந்து இருப்பது. உங்களது சக்தியினை வெகுவாய் இழக்கச் செய்யும். அசையாமல் வெகு நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது இருதயத்தினை வெகுவாய் பாதிக்கும். ஒரு மணிக்கொருமுறை 3-5 நிமிடங்கள் வரை நடங்கள். உடலில் ஆக்ஸிஜன் சக்தி கூடும். சோர்வு நீங்கும்.

அடிக்கடி காபி குடிக்கும் பழக்கம் உள்ளதா? அளவான ஓரிரு முறை காபி குடிக்கும் பழக்கம் ஒரு ஊக்குவிப்பாக இருக்கும். மதியம் 2 மணிக்கு பிறகே காபி, டீ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது. அதிக காபி, அடிக்கடி காபி, டீ இவை இரண்டும் உங்களை மிகவும் சோர்வாக்கி விடும்.

Image result for dullness feelingமிகவும் குறைவாகவே தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கண்டிப்பாய் மிகவும் சோர்வாகத்தான் இருப்பீர்கள். சிலருக்கு தண்ணீர் குடியுங்கள். தண்ணீர் குடியுங்கள் என்று சொல்லி கொண்டே இருக்க வேண்டும். இத்தகையோர் கையில் ஒரு பாட்டில் தண்ணீர் கண்டிப்பாய் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு மணி நேரத்திற்கொரு முறை கொஞ்சம் தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். சோர்வு நீங்கும். மேலும் உடலில் தேவையான நீர் சத்து இல்லை என்றால் பல பாதிப்புகள் ஏற்படும். நன்கு நிமிர்ந்து அமருங்கள். கோணல் மாணலாக மடங்கி அமர்வது உடலில் சோர்வினை ஏற்படுத்தும். எனவே நிமிர்ந்து அமருங்கள்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker