இந்தியா

“கனவு நாயகன்” முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமிற்கு இன்று 87-வது பிறந்தநாள் !!

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் உள்ள அவரது மணிமண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமிற்கு இன்று 87-வது பிறந்தநாள்.

அப்துல்கலாம் வாழ்கை வரலாறு:

ராமேஸ்வரம் பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் ஜெயினாலுபுதீன் – ஆஷியம்மாளுக்கு 7 வது மகனாக பிறந்தவர். தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் பிறந்து, தனது அசாத்திய திறமையாலும் கடின உழைப்பாலும் ஏவுகணை விஞ்ஞானியாக நாட்டுக்கு அரிய கண்டுபிடிப்புகளை வழங்கினார் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.

இவர் படகோட்டியின் மகன், பண்பாளர், ஏவுகனை விஞ்ஞானி, மக்கள் ஜனாதிபதி, சிறந்த நிர்வாகி, குழந்தைகளின் ரோல்மாடல் என பல பரிமாணங்களை கொண்டிருந்தார். ராமேஸ்வரத்தில் ஆரம்ப கல்வியும், திருச்சி, ராமநாதபுரம் போன்ற இடங்களில் மேற்படிப்பையும் முடித்த அவர், சென்னை எம்.ஐ.டியில் விமான தொழில்நுட்ப கல்வியை முடித்தார்.

கலாம் தனது கடுமையான உழைப்பால் ஆராய்ச்சிப் பணிகளில் பல சாதனைகளை புரிந்தார். அக்னி ஏவுகனை சோதனைக்குப் பின் உலகம் முழுவதும் அறியப்பட்டார். இவருடைய சாதனைகளால் பத்ம பூஷன், பத்ம விபூஷன் என விருதுகள் அவரை தேடி வந்தன. நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்ற உன்னத மனிதர் அப்துல் கலாம் ஆவார்.

இந்த சாதனைகளை தொடர்ந்து அப்துல் கலாம் 2002 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி நாட்டின் 11-வது ஜனாதிபதியாக பதவியேற்றார். தனது பணி முடியும் வரை மக்களின் ஜனாதிபதி என பெயர்பெற்றவர். குழந்தைத்தனமான குரல் வளத்தை கொண்டிருந்த கலாம், தமது பதவிக்காலத்திலும் பள்ளி மாணவர்களையும், இளைஞர்களையும் சந்தித்து உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

2015 ஆம் ஆண்டு, இதே நாளில் “அருமை மாணவர்களே” என்ற இறுதிச் சொற்களுடன் அவரின் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு சாதி, மத, இன, பேதமின்றி இந்தியர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். அறிவியல் அன்றி வேறு எந்த ஒரு இயக்கமும் சாராத அவரின் காலம் ஒரு பொற்காலம் எனலாம்.

2011ஆம் ஆண்டு அப்துல் கலாம் பிறந்தநாளை இனி உலக மாணவர்கள் தினமாக கொண்டாட ஐ.நா சபை அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் இன்று அப்துல்கலாம் பிறந்த நாள் கொண்டாடப்படுவது போல், அவரது மணிமண்டபம் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வகையில் ஒளியூட்டப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker