இந்தியா

நாடுமுழுவதும் இன்று ரக்சா பந்தன் கோலாகல கொண்டாட்டம்!!

ஆண்களையும் பெண்களையும் இணைக்கும் அன்பின் அடையாளமான ரக்ஷாபந்தன் திருவிழா இந்தியாவின் கலாசார பெருமையை எடுத்துக்கூறும் சிறப்பான Image result for raksha bandhan celebration imagesநிகழ்வுகளில் ஒன்று. ரக்ஷாபந்தன் விழா அன்று பெண்கள், தங்கள் சகோதரர்கள் மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக, அவர்கள் கரங்களில் ராக்கி கயிறு கட்டுவது வழக்கம். 

வட இந்தியாவில் பிரபலமாக கொண்டாடப்படும் இந்த ரக்ஷாபந்தன் நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஆவணி மாதம் பௌர்ணமி தினத்தன்று கொண்டாப்படுகிறது. இந்நாளில் பெண்கள் தமது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் ராக்கி கட்டி சகோதர பாசத்தை வெளிபடுத்துவர். சகோதரர்கள், அந்த பெண்மணிக்கு தங்களால் முடிந்த அன்பு பரிசை வழங்குவார்கள். 

Image result for raksha bandhan celebration imagesஇந்துக்கள் பண்டிகையாக இந்நிகழ்ச்சி கருதப்பட்டாலும், வேறுபல மதத்தை சேர்ந்த மக்களும் இத்திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தற்போது இந்த பண்டிகை தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த வருடம் ரக்ஷா பந்தன் நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 26-ஆம் (இன்று) கொண்டாப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடுமுழுவதும் உள்ள சகோதர சகோதரிகள் நாட்டினையே விதவிதமான ராக்கிகள் மூலம் வண்ணமயமாக்கி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker