விளையாட்டு

மகளிர் ஹாக்கியில் இந்தியா முதலிடம்!!

18-வது ஆசிய விளையாட்டு போட்டி ஆகஸ்டு 18 அன்று இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.

ஆசிய விளையாட்டு போட்டியில் தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஆக்கி, கபடி உள்பட 40 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெறும்.

Related imageஇந்த போட்டியில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட 45 நாடுகளை சேர்ந்த 10000 க்கும் மேற்பட்ட வீரர்வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். வரும் செப்டம்பர் 2-ந் தேதியோடு போட்டிகள் அனைத்தும் நிறைவுபெறுகிறது.

இந்நிலையில், மகளிர் ஹாக்கி பி பிரிவில் தென்கொரியாவை, 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது.

இந்தியா, தென்கொரிய 2 அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் இந்த ஆட்டத்தில் மோதின.

ஆட்டம் தொடங்கியதில் இருந்து இந்திய அணியின் ஆதிக்கம் இருந்தது. முதல் பாதி ஆட்டத்தில் 2 அணிகளும் 1-1 கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.

2 ஆம் பாதியில் இந்திய வீராங்கனைகள் ஆட்டம் அபாரமாக இருந்தது. அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் இறுதியில் தென் கொரியா தோல்வியைத் தழுவியது.

இதன்மூலம் பி பிரிவில் இந்தியா முதலிடம் பெற்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker