விளையாட்டு
நேஷன்ஸ் லீக் கால்பந்து : நெதர்லாந்து அபார வெற்றி !!
ஐரோப்பிய கால்பந்து ஆணையம் நடத்தி வரும் நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில், நேற்று நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி அணிகள் மோதின.
இதில் உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய முன்னாள் மான்செஸ்டர் யுனைட்டட் வீரர் மெம்ஃபிஸ் டிபாய். ஜெர்மனி அணி வீரர்களை படாத பாடு படுத்தினார்.
போட்டி ஆரம்பித்த சில நொடிகளிலேயே டிபாய் அடித்த கார்னர் கிக் ஷாட்டை வேன் டைக் தலையால் முட்டி கோல் அடித்து தனது அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலைப்படுத்தினர்.
அதன் பின் நெதர்லாந்து அணி வீரர்கள் கோல் போட பல வாய்ப்புகளை உருவாக்கியது.
இருப்பினும் அந்த வாய்ப்புகள் வீணாகின. அடுத்த படியாக வீரர் டிபாய் மற்றொரு கோல் அடித்து 2-0 என முன்னிலைப்படுத்தினர்.
கோல் அடித்த 90வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் வைனால்டம் கோல் அடிக்க 3-0 என்ற கணக்கில் போட்டி முடிவடைந்தது. இந்த முடிவால் ஜெர்மனி அணி கோப்பையில் இருந்து நாக் அவுட் செய்யப்படும் நிலையில் உள்ளது.