தொழில்நுட்பம்
மனிதர்கள் வாழ ஒரு புதிய கோள் கண்டுபிடிப்பு !!
நாசாவின் கெப்ளர் டெலஸ்கோப்பை வைத்து எடுத்த தகவல்களைக் கொண்டு கனடாவின் மாண்ட்ரியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மனிதர்கள் வாழ்வதற்குத் தகுந்த புதிய வெளிக்கோள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தப் புதிய கோளிற்கு ‘வுல்ப் 503பி (Wolf 503b)’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த வெளிக்கோள் கன்னி நட்சத்திரக் கூட்டத்திற்கு இடையில், பூமியில் இருந்து 145 ஒளி ஆண்டுகள் தொலைவில் மற்ற வெளிக்கோள்களை விட பூமிக்கு அருகில் இருப்பதாக புதியதொரு தகவல் தெரிய வந்துள்ளது.