தொழில்நுட்பம்

கூகுளுக்கு ரூ.35,000 கோடி அபராதம்: ஐரோப்பிய கூட்டமைப்பு அதிரடி!

பிரஸல்ஸ் (ஜூலை 19) 2018:   கூகுள், கூகுள் குரோம்களை சந்தைப்படுத்தும் வகையில், ஆன்ட்ராய்டு போனில் பயன்படுத்தியது தொடர்பான புகாரில் கூகுள் நிறுவனத்திற்கு 35 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் முன்னணி தேடுதல் தளமாக உள்ளது கூகுள் நிறுவனம்.

இந்த நிறுவனம் ஆன்ட்ராய்டு செல்போன்களில் தனது தேடுதல் அப்ளிகேஷனான கூகுள் மற்றும் கூகுள் குரோம்களை சந்தைப்படுத்தியுள்ளது. 

போட்டி நிறுவனங்கள் புகார் இணையதள உலகில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையில் கூகுள் நிறுவனம், தனது செயலிகளான கூகுள் மற்றும் கூகுள் குரோம்களை ஆன்ட்ராய்டு மொபைல் போன் சிஸ்டத்தை தவறாக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.

போட்டி நிறுவனங்கள் புகார்:  விதிகளை மீறி கூகுள் நிறுவனம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக போட்டி நிறுவனங்கள் குற்றம்சாட்டின. இதன்மூலம் கூகுள் குரோம் மற்றும் கூகுள் பிரவுசரின் பயன்பாட்டை அதிகரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

போட்டியாளர்களை ஒடுக்கிய கூகுள்:  சாம்சங், ஹுவெய் ஆகிய நிறுவனங்களின் மொபைல் போன்களில் தனது கூகுள், கூகுள் குரோம்களை முன்கூட்டியே நிறுவி, தனது போட்டியாளர்களை அந்நிறுவனம் ஒடுக்கியதாகவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

5000 கோடி அமெரிக்க டாலர் 5000 கோடி அமெரிக்க டாலர்:  இதுதொடர்பான வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியனின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 5100 கோடி அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

90 நாட்களுக்குள்:  இது இந்திய ரூபாயின் மதிப்பில் 35 ஆயிரம் கோடி ரூபாயாகும். மேலும், கூகுள் தன்னுடைய சட்டவிரோத செயல்பாட்டை 90 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேல்முறையீடு செய்ய முடிவு:  இதனிடையே அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக ‘கூகுள்’ நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்திய சந்தையில் ஆன்லைன் தேடலில் பாரபட்சமாக செயல்பட்டதாகக் கூறி கூகுள் நிறுவனத்திற்கு ரூ. 136 கோடி அபராதம் விதித்து இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker