தொழில்நுட்பம்

இந்தியாவில் புதிய அறிமுகம் : ஆண்ட்ராய்டு டிவி !!

இந்தியாவில் இஃபால்கான் என்ற நிறுவனம் புதிய ஹெச்.டி ரெடி ஸ்மார்ட் டிவி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 32 இன்ச் கொண்ட இந்த ஆண்ட்ராய்ட் டிவியில் கூகுள் சர்டிபிகேட் உடன் ஏஐ அசிஸ்டெண்ட் வசதியும் உண்டு.

பிளிப்கார்ட் நிறுவனத்தின் மூலம் கிடைக்கும் இந்த டிவியின் விலை குறித்த தகவல் அடுத்த வாரம் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மற்ற இடங்களில் இந்த டிவி கிடைக்கும் இடம் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை.

இஃபால்கான் 32K2A என்ற மாடல்:
இஃபால்கான் 32K2A என்ற மாடல் எண்ணுடன் வெளிவரும் இந்த டிவி கூகுள் நிறுவனத்தின் சர்டிபிகேட் பெற்ற முதல் 32 இன்ச் ஆண்ட்ராய்டு டிவி என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்த டிவி ஆண்ட்ராய்ட் 8.0 ஓரியோ மூலம் இயங்குகிறது. மேலும் இந்த டிவியில் கூகுள் அசிஸ்டெண்ட் வசதி உள்ளது ஒரு சிறப்பு அம்சமாகும்.

கூகுள் அசிஸ்டெண்ட்:
இந்த டிவியின் உதவியால் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், தகவல் தேடல்கள், மற்ற உபகரணங்களை டிவியுடன் இணைத்தல் ஆகியவற்றை கூகுள் அசிஸ்டெண்ட் உதவியால் வெறும் குரல் மூலம் கட்டளையிட்டால் போதும்.

இந்த ஒரு வசதியை தவிர இந்த டிவியின் மற்ற ஹார்ட்வேர் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

இஃபால்கான் 40F2A மற்றும் இஃபால்கான் 49F2A: 
மேலும் இதே நிறுவனம் 40 மற்றும் 49 இன்ச்களில் இரண்டு புதிய மாடல்களை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த டிவிக்களும் முழு ஹெச்டி. ரெசலூசன் மட்டுமின்றி ஆண்ட்ராய்ட் பயனாளிகளுக்கும் உதவியாக இருக்கும். இந்த இஃபால்கான் நிறுவனத்தின் இஃபால்கான் 40F2A மற்றும் இஃபால்கான் 49F2A ஆகிய இரண்டு மாடல்களும் வரும் அக்டோபரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் சர்டிபிகேட்:
மேலும் இதே நிறுவனம் 65 இன்ச் மற்றும் 75 இன்ச் அளவுகளில் கூகுள் சர்டிபிகேட் உடன் கூடிய ஆண்ட்ராய்டு டிவிக்களையும் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த 75 இன்ச் டிவியில் ஹார்மான் கார்டன் ஸ்பீக்கர்கள் இருப்பதால் வித்தியாசமான சவுண்ட் சிஸ்டத்தை உணரலாம்.

டிசிஎல் இந்தியா நிறுவனத்தின் மேனேஜர் மைக் சென் அவர்கள் இதுகுறித்து கூறியபோது, ‘நாட்டில் நுகர்வோர் தளம் வளர்ந்து வரும் நிலையில் மிகவும் விலை உயர்ந்த ஸ்மார்ட் தொழில்நுட்பத்திற்கான பொருட்களை வாடிக்கையாளர்கள் தேடி வருகின்றனர்.

அந்த வகையில் கூகுள் சர்டிபிகேட் கொண்ட ஆண்ட்ராய்ட் டிவிக்கள் வாடிக்கையாளர்களின் தேவையை முழு அளவில் பூர்த்தி செய்யும் அம்சமாகும்.

இஃபால்கான் 32K2A மாடலின் துவக்கமானது, ஒவ்வொரு ஸ்மார்ட் கேம் புதிய ஸ்மார்ட் லைஃப் டெக்னாலஜினை அறிமுகப்படுத்தியதன் மூலம், “மலிவு விலையில் ஸ்மார்ட் லைஃப்” என்ற குறைந்த விலையில் கிடைக்க உதவும் என்று கூறினார்.

Related Articles

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker