தொழில்நுட்பம்

கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து விரட்டப்பட்ட பதஞ்சலி “கிம்போ” செயலி..!!

தகவல் பரிமாற்றத்திற்காக சமீபத்தில் வெளியிடப்பட்ட பதஞ்சலியின் ’கிம்போ’ செயலி, கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து காணாமல் போயுள்ளது.

ஸ்மார்ட்ஃபோனை வைத்திருக்கும் பலரும் தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்தி வரும் செயலி வாட்ஸ் அப். இதற்கு போட்டியாக பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட செயலி தான் ’கிம்போ’.

ஒருவரை பார்க்கும் போது, பரஸ்பர அறிமுகத்திற்கு வேண்டி பயன்படும் வார்த்தான் தான் ’கிம்போ’. ஆங்கிலத்தில் ”ஹாய்”, ”ஹலோ” இருப்பது போல சமஸ்கிருதத்தில் ’கிம்போ’ என்ற வார்த்தை உள்ளது.

மேலும் ஆங்கிலத்தில் ”ஹாய்”, ”ஹலோ” வார்த்தைகளை ”வாட்ஸ் அப்” என பயன்படுத்துவதும் உண்டு. அதை வைத்து தான் வாட்ஸ் அப் செயலி உருவாக்கப்பட்டது. அதனால் “கிம்போ” என்ற சமஸ்கிருந்த வார்த்தைக்கு ”வாட்ஸ் அப்” என்ற பொருளும் கொள்ளலாம்.

ஃபேஸ்புக்கின் துணை நிறுவனமாக செயல்பட்டு அரும் வாட்ஸ் அப்-பிற்கு போட்டியாக தொடங்கப்பட்ட ’கிம்போ’ செயலிக்கு ஆரம்பத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.

அனால் அதேநேரத்தில், ’போலோ ஷாட்’ என்ற செயலியை பின்பற்றி ’கிம்போ’ அப்பட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது என நெட்டிசன்கள் ஆதாரத்தோடு குற்றச்சாட்டுக்களை எழுப்பினார்கள்.

இந்நிலையில் கூகுள் ப்ளே ஸ்டாரில் இருந்து பதஞ்சலியின் ’கிம்போ’ செயலி காணாமல் போயுள்ளது. பல ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டாளர்கள் இந்த செயலிக்கு ஏகப்பட்ட எதிர்மறை கருத்துக்களை பதிவிட்டுள்ளதே அதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

தொடர்ந்து ரேட்டிங்க் மதிப்பெண் குறைந்ததால், விதிகளின் படி கூகுள் ப்ளே ஸ்டாரிலிருந்து பதஞ்சலி “கிம்போ” செயலி நீக்கப்பட்டுள்ளது. மேலும் இது திருடப்பட்ட செயலி எனவும் குற்றச்சாட்டுகள் ப்ளே ஸ்டோரில் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதுபற்றி பதஞ்சலி நிறுவனத்தார் ”கிம்போ” செயலி ஒரு ட்ரையல் அம்சம் தான். அதன்மூலம் மக்களின் மனநிலை நன்கு அறியப்பட்டுள்ளது. விரைவில் ”கிம்போ” செயலியின் முழுமையான வடிவம் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்

Related Articles

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker