ஆரோக்கியம்

பூண்டு அதிகமா சாப்பிடக் கூடாது ஏன் தெரியுமா?

நாம் அன்றாட பயன்படுத்தும் உணவுப் பொருட்களுள் ஒன்றான பூண்டை அதிகளவில் எடுத்துக்கொள்வதால் பக்க விளைவுகள் ஏற்படும். அந்த மாதிரி பூண்டு பிரியர்களுக்கான பதிவு தான் இது. 

பக்க விளைவுகள் என்னென்ன?

  • Image result for sweatingஒருவரின் உடலை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்காமல் இருப்பதால் அவரிடம் ஒரு வித துர்நாற்றம் வீசும். ஆனால் இது சுகாதார சீர்கேடால் மட்டும் அல்ல, பூண்டும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
  • உடல் மற்றும் வாயில் துர்நாற்றம் வீசுவதற்கான பல்வேறு ரசாயனங்களை பூண்டு வழங்குகிறது. ஆகவே உங்களுக்கு பிடித்தமான பூண்டு வாசனையுடன் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது தவறாமல் வாயை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அதிகமாக பூண்டு சாப்பிடுவதால் சருமத்தில் அரிப்பு மற்றும் தடிப்பு உண்டாகலாம். பூண்டில் உள்ள அல்லிநேஸ் என்னும் என்சைம், பொதுவாக சரும தடிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும்.
  • Image result for garlicஆகவே பூண்டு உறிக்கும்போது அல்லது வெட்டும்போது, கையில் க்ளௌஸ் அணிந்து கொண்டு செய்யலாம். இல்லையேல் இந்த என்சைம் உங்கள் சருமத்தில் அரிப்பு மற்றும் தடிப்பை உண்டாக்கலாம்.
  • பச்சையாக பூண்டை எடுத்துக் கொள்வதால் தலைவலி உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. சாப்பிட்டவுடன் தலைவலி ஏற்படாது.ஆனால் அந்த செயல்பாட்டை ஊக்குவிக்கலாம்.
  • Related imageபச்சை பூண்டை சாப்பிடுவதால், முக்கோண நரம்பு தூண்டப்பட்டு ந்யுரோபெப்டிடு வெளியாவதை ஊக்குவிக்கிறது. இது மூளையை மூடியிருக்கும் தோல் பகுதியை அடைந்து தலைவலியை உண்டாக்குகிறது.
  • இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிட்டதும், ஒரு டம்ளர் நீரைக் குடிக்க வேண்டும். பூண்டு சாப்பிடுவது சிலருக்கு வயிற்று எரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனை ஏற்படுவதை போல உணர்ந்தால், பூண்டு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

Related Articles

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker